ADDED : ஜூன் 10, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குடிநீர் கேட்டு பொதுமக்கள், காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
குளித்தலை அடுத்த. கே.பேட்டை பஞ்., சீகம்பட்டி கிராமத்தில், ஒரு மாதத்துக்கு மேலாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள், அன்றாட பணிகளை செய்ய முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை கிராம மக்கள், தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காலி குடங்களுடன் யூனியன் ஒன்றிய அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யூனியன் கமிஷனர் சுந்தரபாண்டியன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததின் பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.