/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குகை வழிப்பாதையில் நடந்து செல்ல அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை
/
குகை வழிப்பாதையில் நடந்து செல்ல அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை
குகை வழிப்பாதையில் நடந்து செல்ல அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை
குகை வழிப்பாதையில் நடந்து செல்ல அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை
ADDED : மே 14, 2025 01:56 AM
குளித்தலை,பரளி ரயில்வே குகை வழிப்பாதையில், பைக் மற்றும் நடந்து செல்ல வழித்தடம் அமைத்து தர வேண்டும் என, அதிகாரி
களிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குளித்தலை அடுத்த
தண்ணீர்பள்ளி, பரளி, கருங்களாப்பள்ளி, அய்யர்மலை நெடுஞ்சாலையில், பரளி ரயில்வே கேட்டில் குகை வழிப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி மூன்று மாதங்களில் முடிக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலக தகவல் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11:30 மணியளவில் குகை
வழிப்பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.
அப்போது, பரளி, தண்ணீர்பள்ளி, கருங்காளப்பள்ளி கிராம மக்கள் சார்பில் பைக் மற்றும் பொது மக்கள் நடந்து செல்லும் வகையில், பாதை அமைத்து தர வேண்டும் என, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பரிசீலிக்கப்படும் என,
அதிகாரிகள் தெரிவித்தனர்.