/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்
/
கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்
ADDED : நவ 26, 2025 02:01 AM
அரவக்குறிச்சி, கால்வாய் வசதி இல்லாததால், தேங்கி நிற்கும் கழிவுநீர், சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலை, வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த சாலையில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி, மின்வாரிய அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும் சாலையில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி எதிரே பள்ளமான பகுதியில், கழிவுநீர் தேங்கி விடுகிறது.
தேங்கிய கழிவுநீர் நிரம்புவதால் மழை பெய்யும் நேரத்தில், சாலையில் செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நோய் தொற்று ஏற்பட்டு விடுமோ என அச்சத்துடனே செல்கின்றனர். நகராட்சி நிர்வாகம் இப்பகுதியை பார்வையிட்டு கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.

