/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டிரான்ஸ்பார்மரை இடம் மாற்றம் செய்ய மக்கள் வேண்டுகோள்
/
டிரான்ஸ்பார்மரை இடம் மாற்றம் செய்ய மக்கள் வேண்டுகோள்
டிரான்ஸ்பார்மரை இடம் மாற்றம் செய்ய மக்கள் வேண்டுகோள்
டிரான்ஸ்பார்மரை இடம் மாற்றம் செய்ய மக்கள் வேண்டுகோள்
ADDED : ஆக 05, 2025 12:58 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில் இருந்து, தாராபுரம் செல்லும் சாலையில், போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள, டிரான்ஸ்பார்மரை இடம் மாற்றம் செய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில் இருந்து, தாராபுரம் செல்லும் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே, நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் பல ஆண்டுகளாக டிரான்ஸ்பார்மர் உள்ளது. சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வந்ததால், தற்போது டிரான்ஸ்பார்மர் சாலையின் அருகில் வந்துவிட்டது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, இடையூறாகவும், விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, சாலை அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மரை வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு, இடமாற்றம் செய்ய வேண்டும்.