/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஏமூர் புதுாரில் சேதமடைந்துள்ள குடிநீர் குழாயால் மக்கள் அவதி
/
ஏமூர் புதுாரில் சேதமடைந்துள்ள குடிநீர் குழாயால் மக்கள் அவதி
ஏமூர் புதுாரில் சேதமடைந்துள்ள குடிநீர் குழாயால் மக்கள் அவதி
ஏமூர் புதுாரில் சேதமடைந்துள்ள குடிநீர் குழாயால் மக்கள் அவதி
ADDED : அக் 04, 2025 01:20 AM
கரூர், ஏமூர் புதுாரில் சேதமடைந்த குடிநீர் குழாய் மற்றும் மின் மோட்டார் சுவிட்ச் பெட்டிகளை சீரமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தான்தோன்றிமலை பஞ்., யூனியன், ஏமூர் பஞ்சாயத்து, ஏமூர்புதுார் பகுதியில் கோவில் மற்றும் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வசித்து வரும், பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் போடப்பட்டது. மேலும், போர்வெல் அமைக்கப்பட்டு, மின் மோட்டாரும் பொருத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மின் மோட்டார் மற்றும் போர்வெல் குழாய்களும் சேதம் அடைந்துள்ளதால், நிலத்தடி நீரையும் பொதுமக்களால் பயன்படுத்த முடியவில்லை. மின் மோட்டாரை இயக்க, அமைக்கப்பட்ட சுவிட்ச் போர்டுகளும் சேதம் அடைந்துள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே, ஏமூர் புதுாரில் சேதமடைந்த குடிநீர் குழாய், போர்வெல் குழாய்களை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.