/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்டெக்ஸ் தொட்டிசேதத்தால் மக்கள் அவதி
/
சின்டெக்ஸ் தொட்டிசேதத்தால் மக்கள் அவதி
ADDED : டிச 21, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், டிச. 21-
பொய்கைப்புத்துாரில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கம்மநல்லுார் பஞ்சாயத்து, பொய்கைப்புத்துார் நெடுஞ்சாலை விநாயகர் கோவில் அருகில், மக்கள் பயன்பாட்டிற்கு போர்வெல் அமைக்கப்பட்டு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டியில் ஏற்ற முடியாததால், மக்கள் நேரடியாக குழாய் வழியாக தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே, புதிய சின்டெக்ஸ் தொட்டியை வைக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.