sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொங்கல் பண்டிகைக்கு மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

/

பொங்கல் பண்டிகைக்கு மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

பொங்கல் பண்டிகைக்கு மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

பொங்கல் பண்டிகைக்கு மார்க்கெட்டில் குவிந்த மக்கள்


ADDED : ஜன 13, 2025 03:08 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, கரூர் உழவர்சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில் நேற்று, பொதுமக்கள் கூட்டம் அலைமோ-தியது.

தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் பண்டிகை, இன்று போகி பண்டிகையுடன் துவங்குகிறது. நாளை, சூரியன் பொங்கல், நாளை மறுநாள், மாட்டு பொங்கல், 16ல் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்-ளது. இதற்காக, காய்கறி, பழங்கள், மஞ்சள்

கொத்து, கரும்பு, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை வாங்க, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில் மக்கள் குவிந்தனர்.

தேங்காய் ஒரு கிலோ, 55 ரூபாய் முதல், 65 ரூபாய், மஞ்சள் கொத்து ஒரு ஜோடி, 30 ரூபாய் முதல், 50 ரூபாய், வாழைப்பழம் ரகத்தை பொறுத்து ஒரு சீப், 40 ரூபாய் முதல், 60 ரூபாய், தக்-காளி ஒரு கிலோ, 25 ரூபாய், வெண்டைக்காய், 50 ரூபாய், புடலை, 55 ரூபாய், கேரட், 70 ரூபாய், பீர்க்கங்காய், 60 ரூபாய், கத்தரிக்காய், 45 ரூபாய், அவரைக்காய், 150 ரூபாய், பாகற்காய், 50 ரூபாய், முள்ளங்கி, 30 ரூபாய், பீன்ஸ், 80 ரூபாய், முட்-டைகோஸ், 40 ரூபாய், செங்கரும்பு ஒரு ஜோடி, 100 ரூபாய், முருங்கைக்காய், 150 ரூபாய், பச்சை மிளகாய், 50 ரூபாய், உருளை கிழங்கு, 50 ரூபாய், கருணை கிழங்கு, 80 ரூபாய், சின்ன வெங்காயம், 90 ரூபாய், பெரிய வெங்காயம், 50 ரூபாய், கொத்தவரங்காய், 55 ரூபாய், சர்க்கரை வள்ளி கிழங்கு, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.கரூர் ஜவஹர் பஜாரில், வீட்டு வாசலில் கோலமிட பயன்படும் கலர் பொடிகளை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். ஒரு பாக்கெட், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. போகி பண்டிகையையொட்டி, வீட்டு வாசலில் வைக்கப்படும், ஆவா-ரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை ஆகியவற்றை கொண்ட ஒரு கட்டு, 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் செயல்படும், வாழை மார்க்கெட்டில் பூவன் தார், 800 ரூபாய், ரஸ்தாளி, கற்பூர வள்ளி தார், 450 ரூபாய், மொந்தன், 350 ரூபாய், செவ்வாழை தார், 700 ரூபாய், பச்சை நாடன், 400 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்-டது.

29,000 கிலோ காய்கறி விற்பனை

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் இன்று, போகி பண்டிகையுடன் துவங்குகிறது. நாளை காலை, சூரியன் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இதனால், நேற்று கரூர் உழவர்சந்தை மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். கரூர் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 29,140 கிலோ காய்கறி, 15 லட்சத்து, 57,455 ரூபாய் மதிப்பில் விற்பனையானது. 155 விவசாயிகளும், 4,857 பொதுமக்களும், நேற்று கரூர் உழவர் சந்தைக்கு வந்திருந்தனர்.






      Dinamalar
      Follow us