/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரக்கிளைகளை வெட்டி அகற்றிட நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்
/
மரக்கிளைகளை வெட்டி அகற்றிட நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்
மரக்கிளைகளை வெட்டி அகற்றிட நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்
மரக்கிளைகளை வெட்டி அகற்றிட நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 20, 2025 01:04 AM
குளித்தலை, குளித்தலை, அண்ணா நகர் மைய பகுதியில் பைபாஸ் அருகில் இருந்து, விநாயகர் கோவில் செல்லும் சாலையில் மரம் ஒன்று மிகவும் மோசமான நிலையில் சாய்ந்துள்ளது. அதன் கிளைகள் வெளியே நீண்டு கொண்டிருக்கின்றன. இதனால் பள்ளி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சிரமத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாள்தோறும், 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் செல்கின்றன. பள்ளி வாகனங்கள் செல்லும் போது, மரக்கிளைகள் மாணவ, மாணவியர் மீது பட்டு விடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.