/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்கள் கலை இலக்கிய கழகம் ஆர்ப்பாட்டம்
/
மக்கள் கலை இலக்கிய கழகம் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 11, 2025 06:22 AM

கரூர்: கரூர் மாவட்ட மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில், மாவட்ட தலைவர் அரசப்பன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் மத சார்பற்ற மரபுகளை காக்க வேண்டும், மத நல்லிணக்கத்தை நிலை நாட்ட வேண்டும், மதுரை திருப்பரங்-குன்றத்தில், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரை கைது செய்ய வேண்டும் உள்-ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில பொதுச்செயலாளர் கோவன், சாமானிய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் குணசேகரன், மாவட்ட த.மு.மு.க., செய-லாளர் சாகுல் அமீது, ஆதி தமிழர் பேரவை செயலாளர் பாரதி, செயற்குழு உறுப்பினர் விக்னேஷ்வரன் உள்பட பலர் பங்கேற்-றனர்.

