/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளியணையில் நிழற்கூடம் அமைக்க மக்கள் கோரிக்கை
/
வெள்ளியணையில் நிழற்கூடம் அமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : அக் 15, 2024 03:04 AM
வெள்ளியணையில் நிழற்கூடம்
அமைக்க மக்கள் கோரிக்கை
கரூர், அக். 15-
கரூர் அருகே, வெள்ளியணையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும், என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர் அருகே, வளர்ந்து வரும் பகுதியாக வெள்ளியணை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் அதிரசம், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும், கரூரில் இருந்து வெள்ளியணை வழியாக கூடலூர், பாளையம், குஜிலியம்பாறை, கோவிலூர், எரியோடு வழியாக திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன.
இதனால், வெள்ளியணை பிரதான சாலையில் போக்குவரத்து எப்போதும் பிஸியாக இருக்கும். கோடைக்காலங்களில், வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வெள்ளியணையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மழைக்காலத்தில், பயணிகள் நிழற்கூடம் இல்லாததால், பஸ் ஸ்டாப்பில் உள்ள கடைகளை தேடி பொது மக்கள் ஓடும் நிலை உள்ளது.
குறிப்பாக, வெள்ளி யணை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, நிழற் கூடத்தின் முன், பஸ்கள் நிறுத்தப்படுவது இல்லை.
திண்டுக்கல்-கரூர் சாலை வெள்ளியணை பஸ் ஸ்டாப்பில்தான், பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. அந்த இடத்தில், நிழற்கூடம் இல்லை. இதனால், வெள்ளியணை பஸ் ஸ்டாப்பில் பொதுமக்கள் வசதிக்காக, இரண்டு பக்கமும் நிழற்கூடம் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.