/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் மனு அளிக்கலாம்: கலெக்டர் தகவல்
/
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் மனு அளிக்கலாம்: கலெக்டர் தகவல்
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் மனு அளிக்கலாம்: கலெக்டர் தகவல்
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் மனு அளிக்கலாம்: கலெக்டர் தகவல்
ADDED : டிச 02, 2025 02:16 AM
கரூர், த.வெ.க., கூட்ட நெரிசல் தொடர்பாக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினரிடம், இன்று முதல் மனு அளிக்கலாம் என, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த செப்., 27ல், கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணையை மேற்பார்வை செய்திட, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், கரூருக்கு இன்று (2ம் தேதி) வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர பொது மக்கள், அமைப்புகள் ஆகியோர் மனுக்கள் அளிக்க விரும்பினால், கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள, குழுவினரிடம் நேரடியாக இன்று காலை, 10:30 மணி முதல் அளிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.