/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்
/
தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : டிச 02, 2025 02:15 AM
கரூர், கரூர்-, திருச்சி சாலையோரம், மழைநீர் வடிகால் கால்வாய் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கரூரில் இருந்து, திருச்சி உட்பட பல்வேறு பகுதி
களுக்கு அனைத்து வாகனங்களும் காந்திகிராமம் வழியாக செல்கிறது. தெரசா கார்னர் பகுதியில் இருந்து, ரயில்வே மேம்பாலம் வரை காந்திகிராமம் பகுதியின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.
சாலை இருபுறமும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், சாலையோர வடிகால்கள் பல்வேறு பகுதிகளில் திறந்த நிலையில் உள்ளது.
இதனால் விபத்து அபாயம் காத்திருக்கிறது. இரவு நேரத்தில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களால், விபத்து ஏற்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
இது குறித்து, பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விபரீதம் நடக்கும் முன், கால்வாய் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

