/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் அலுவலர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்
/
கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் அலுவலர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்
கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் அலுவலர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்
கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் அலுவலர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்
ADDED : டிச 02, 2025 02:15 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில், பங்கேற்க வந்த அரசு அலுவலர்கள் அடையாள அட்டை அணிந்த பின்னரே, போலீசார் உள்ளே செல்ல அனுமதி வழங்கினர்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், திங்களன்று நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், தொடர்ந்து தீக்குளிப்பு முயற்சி நடந்து வருகிறது. இதனால், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடும் சோதனைக்கு பின், மனு கொடுக்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் கொண்டு வந்த பைகள், முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை, கருவூல கணக்குத்துறை, சிவில் சப்ளை, ஊரக வளர்ச்சி துறை, பத்திரப்பதிவு, இணை இயக்குனர் வேளாண், முதன்மை கல்வி, கூட்டுறவு உள்பட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம் நடந்தது. பணிக்கு வந்த அலுவலர்கள், பணியாளர்களின் பாதுாப்பு கருதி, அடையாள அட்டையை கட்டாயம் அணிந்து வர வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தினர். சில பணியாளர்கள் அடையாள அட்டை அணியாமல் வந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த அடையாள அட்டையை, அணிய வைத்தனர். அதன் பின், அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். இனி வரும் வாரத்தில் அனைவரும், அடையாள அட்டை அணிந்து வர வேண்டியது கட்டாயம் என, போலீசார் தெரிவித்தனர்.

