/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா கேட்டு மனு
/
விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா கேட்டு மனு
ADDED : ஜூலை 25, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:  மருதுாரில், பயன்பாட்டுக்கு இல்லாத அரசு இடத்தில் விளை-யாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி மையம் அமைக்க, எம்.எல்.ஏ., மாணிக்கத்திடம், கவுன்சிலர் சத்யா கோரிக்கை மனு அளித்தார்.
குளித்தலை அடுத்த, மருதுார் பெருமாள் கோவில் அருகில், 90 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் பொது மக்கள் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இந்த இடத்தில் பஞ்., பகுதி பொது மக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, உடற்ப-யிற்சி மையம் அமைக்க வேண்டும் என, டவுன் பஞ்., கவுன்-சிலர் சத்யா மாதவன், எம்.எல்.ஏ.,மாணிக்கத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.

