/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் செல்லும் பாதை ஆக்கிரமிப்புதோகைமலை கிராம மக்கள் மனு
/
கோவில் செல்லும் பாதை ஆக்கிரமிப்புதோகைமலை கிராம மக்கள் மனு
கோவில் செல்லும் பாதை ஆக்கிரமிப்புதோகைமலை கிராம மக்கள் மனு
கோவில் செல்லும் பாதை ஆக்கிரமிப்புதோகைமலை கிராம மக்கள் மனு
ADDED : டிச 17, 2024 01:52 AM
கரூர், டிச. 17-
கோவில் செல்லும் பாதையின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, தோகைமலை நாகனுார் கிராம மக்கள், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் சாலையில் இருந்து, பரந்தாடி பெரியகாண்டியம்மன் கோவில் வரை வண்டி பாதை உள்ளது. தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பாதை இருந்த தடமே தெரியாமல் உள்ளது. இதனால், வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள், தோகைமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவிலுக்கு வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்கள், வண்டிபாதை ஆக்கிரமிப்பு காரணமாக, வேறு வழியில் சுற்றி கோவிலுக்கு வர வேண்டி உள்ளது. எனவே பக்தர்கள், பொதுமக்கள் வசதியை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வண்டி பாதையை அளவீடு செய்து பாதை அமைக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.