/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
ADDED : மார் 11, 2025 06:59 AM
கரூர்: செம்படாபாளையத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என, அப்பகுதி மக்கள், கரூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், புஞ்சை புகழூர் அருகில் செம்படாபாளையத்தில், ஏராளமான குடும்பங்கள் உள்ளன. குடியிருப்புகள் அருகில், புகழூர் நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இடம் கால்நடைகள் மேய்ச்சல் நிலமாகவும், விவசாயிகள் விளை பொருட்களின் களமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதிக்கு அருகில் உள்ள நிலங்களில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கு, செயல்படும் தனியார் சர்க்கரை ஆலையால், நிலம், நீர், காற்று மாசடைந்துள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பல்வேறு தீங்குகளை உண்டாக்கும். சுத்திகரிப்பு நிலையம் தொடங்க இருக்கும் மந்தைவெளி விவசாய நிலம், அங்கன்வாடி, கோவில்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பாதையாக உள்ளது. இந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.