/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் நிலத்தை அபகரித்தோர் மீது நடவடிக்கை கோரி மனு
/
கோவில் நிலத்தை அபகரித்தோர் மீது நடவடிக்கை கோரி மனு
கோவில் நிலத்தை அபகரித்தோர் மீது நடவடிக்கை கோரி மனு
கோவில் நிலத்தை அபகரித்தோர் மீது நடவடிக்கை கோரி மனு
ADDED : ஆக 07, 2025 01:27 AM
அரவக்குறிச்சி, நிமிந்தம்பட்டி கிராமத்தில், கோவில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாரிடம், மக்கள் மனு அளித்தனர்.
அரவக்குறிச்சி வட்டம், அணைப்பாளையம் அடுத்துள்ள நிமிந்தம்பட்டியை சேர்ந்த கிராமத்தினர், 100 ஆண்டுகளுக்கு மேலாக, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மதுரை வீரன் சுவாமியை குலதெய்வமாக வழிபட்டு வந்தனர்.
ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் நிமிந்தம்பட்டியை சேர்ந்த சிலர், கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இது சம்பந்தமாக வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டதாக சின்னதாராபுரம் போலீசாரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணை நடந்து வருவதால், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கும்படி சின்னதாராபுரம் போலீசார் தெரிவித்தனர்.