ADDED : ஆக 07, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே மொபட் மீது, கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கட்டளை பகுதியை சேர்ந்த மோகன சுந்தரம் என்பவரது மனைவி மலர்கொடி, 43; இவர் நேற்று முன்தினம் மாலை, பசுபதிபாளையம் முடக்குசாலை பகுதியில், டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக கரூர் எஸ்.வெள்ளாப்பட்டியை சேர்ந்த கோபிநாத், 27; என்பவர் ஓட்டி சென்ற மகேந்திரா கார், மொபட் மீது மோதியது. அதில், மொபட்டில் இருந்து, கீழே விழுந்த மலர்கொடி தலையில் படுகாயம் அடைந்து, அதே இடத்தில் உயிரிழந்தார்.
பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.