/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கேட்டு மனு
/
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கேட்டு மனு
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கேட்டு மனு
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கேட்டு மனு
ADDED : டிச 27, 2024 07:27 AM
குளித்தலை: கரூர் மாவட்டத்தில், ஆர்.டி.மலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு கலெக்டரிடம் அனுமதி கேட்டு, விழா குழுவினர் கோரிக்கை மனு அளித்தனர்.
குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம மக்கள் சார்பாக, 62ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா ஜன., 16ல் நடைபெற உள்ளது. ஆர்.டி.மலையில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பிடாரி அம்மன் கோவில் அருகே, நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு அனுமதி கேட்டு, மாவட்ட கலெக்டர் தங்கவேலுவிடம் முறைப்படி அனுமதி கேட்டு ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள் மனு அளித்தனர்.
ஆர்.டி.மலையில் பிரசித்திபெற்ற ஜல்லிக்கட்டு விழா நடைபெறும், வாடிவாசல் கலையரங்க மேடை அமைக்க, எம்.எல்.ஏ., மாணிக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 22 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
இதனால், ஆர்.டி.மலை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் விழாவிற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். இதில் வாடிவாசல், ஜல்லிக்கட்டு மாடுகள் வரும் பாதை, மாடுபிடி வீரர்களுக்கான இடம், பார்வையாளர்களுக்கான இடம், வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடும் மாடுகள் ஓடும் பாதை, தடுப்பு வேலி, மருத்துவ சேவை, பாஸ் வழங்கும் இடம், அவசர வழி, வாகனங்கள் நிறுத்தும் இடம் என அனைத்து பகுதிகளையும் முறையாக அமைக்க விழா குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.