/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகராட்சியுடன் வேலம்பாடியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு

ADDED : டிச 31, 2024 07:17 AM
கரூர்: பள்ளப்பட்டி நகராட்சியுடன், பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வேலம்பாடி பஞ்., தலைவர் ராணி தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேலம்பாடி பஞ்சாயத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளப்பட்டி நகராட்சியுடன், வேலம்பாடி பஞ்., இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நகராட்சியுடன் இணைக்க கூடாது என, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பகுதி, குக்கிராமங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால், 100 நாள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பலர் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் வேலை பறிபோகும் அபாயம் உள்ளது. இதுமட்டுமின்றி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், சொத்து வரி உள்பட பல வரிகள் உயரும் அபாயம் உள்ளது. குடிசை நிறைந்த பகுதி என்பதால், அவர்களால் வரி கட்ட முடியாத நிலை ஏற்படும். எனவே, நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.