/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொது இடத்தில் ஆக்கிரமிப்பு மீட்க கோரி கலெக்டரிடம் மனு
/
பொது இடத்தில் ஆக்கிரமிப்பு மீட்க கோரி கலெக்டரிடம் மனு
பொது இடத்தில் ஆக்கிரமிப்பு மீட்க கோரி கலெக்டரிடம் மனு
பொது இடத்தில் ஆக்கிரமிப்பு மீட்க கோரி கலெக்டரிடம் மனு
ADDED : செப் 24, 2024 01:10 AM
கரூர்: பொது இட ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும் என, புஞ்சைக்கா-ளக்குறிச்சி மக்கள், கரூர் கலெக்டர் குறைதீர் கூட்டத்தில், மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: அரவக்குறிச்சி தாலுகாவிற்குட்பட்ட புஞ்சைக்காளக்குறிச்சி பஞ்.,ல் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு என, பொது இடம் உள்ளது. இந்த இடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இது குறித்து கேட்டால் தங்கள் பட்டா இடம் என்று கூறி வருகின்றனர். இது குறித்து பல அலுவலகங்களில் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம்
சார்பில் நில அளவீடு செய்து நிலத்தை மீட்டு தர வேண்டும். இல்-லையெனில், ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு நிகழ்வுகளை முன்-னெடுக்க வேண்டி இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பகுதி நேர ரேஷன் கடை திறப்புகிருஷ்ணராயபுரம்: செக்கணம் கிராமத்தில், பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்-டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, திருக்காம்புலியூர் பஞ்சாயத்து செக்-கணம் கிராமத்தில், பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. எம்,எல்.ஏ., சிவகாமசுந்தரி ரேஷன் கடையை திறந்து வைத்து மக்-களுக்கு பொருட்கள் வழங்கினார்.
கூட்டுறவுத்துறை துணை பதி-வாளர் பொது வினியோக திட்டம் அருள்மொழி, சார்பதிவாளர் சத்யா, கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, வட்ட வழங்கல் அலுவலர் கோமதி,
கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, கிருஷ்ணரா-யபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரவிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.