/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாதாள சாக்கடையில் செல்லும் பிங்க் நிற கழிவு நீரால் அச்சம்
/
பாதாள சாக்கடையில் செல்லும் பிங்க் நிற கழிவு நீரால் அச்சம்
பாதாள சாக்கடையில் செல்லும் பிங்க் நிற கழிவு நீரால் அச்சம்
பாதாள சாக்கடையில் செல்லும் பிங்க் நிற கழிவு நீரால் அச்சம்
ADDED : நவ 22, 2024 01:27 AM
பாதாள சாக்கடையில் செல்லும்
பிங்க் நிற கழிவு நீரால் அச்சம்
கரூர், நவ. 22-
கரூர், அண்ணா நகரில் வெளியேறும் பிங்க் நிற கழிவு நீரால் தொற்று பரவும் அபாயத்தில், -மக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில், மாசுக்கட்டுப்பாட்டு, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கரூர் மாநகராட்சியில் மொத்த முள்ள, 48 வார்டுகளில், 1 முதல், 32வது வார்டு வரை பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில், 14 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன.
இதில், 30 வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர் குழந்தைகள் மையத்துக்கு அருகில் உள்ள, பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதன் வழியாக பிங்க் நிற கழிவு நீர் அதிகப்படியாக வெளியேறி வருகிறது.
இப்பகுதியில் வெளியேறும் கழிவு நீரானது, மழை நீர் வடிகால் வழியாக நேராக சின்ன ஆண்டாங்கோவில் ராஜவாய்க்காலில் கலந்து வருகிறது.
இது குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் ஜெயக்குமார், மாநகராட்சி நகர் நல அலுவலர் கவுரி சரவணன் உள்பட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கழிவுநீர் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.