/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டளை பகுதியில் நெல் பயிர்கள் நடவு
/
கட்டளை பகுதியில் நெல் பயிர்கள் நடவு
ADDED : அக் 13, 2024 08:47 AM
கிருஷ்ணராயபுரம்: கட்டளை பகுதியில், நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கட்டளை, ரெங்கநாதபுரம், மணவாசி, ஆர்.புதுக்கோட்டை ஆகிய இடங்களில் விவசாய நிலங்கள் உள்ளன. அமராவதி பாசன நீர் வடிகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் வருகிறது.
மேலும் மழை பெய்து வருவதால், போர்வேல் கிணறுகளிலும் தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை
பயன்படுத்தி, விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நெல் சாகுபடி
செய்யப்படும் விளை நிலங்களில், இயற்கை பசுந்தாள் விளைந்துள்ளது. இதை டிராக்டர் இயந்திரம்
கொண்டு உழவு செய்து, நிலங்களில் மக்குவதற்கான பணிகள் துரிதமாக நடக்கிறது. இப்பணிகள்
முடிந்ததும், உழவு வயல்கள் சமன்படுத்தப்பட்டு நெல் பயிர்கள் நடவு செய்யப்படும் என, விவசாயிகள்
கூறினர்.