/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மானாவாரி நிலங்களில் உழவு பணிகள் மும்முரம்
/
மானாவாரி நிலங்களில் உழவு பணிகள் மும்முரம்
ADDED : ஆக 16, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், மானாவாரி நிலங்களில் விதை தெளிப்பு பணிக்கு டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவுப்பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, வடுகபட்டி, திருமேனியூர், வயலுார், சரவணபுரம், குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி, சிவாயம், புனவாசிப்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், கணக்கம்பட்டி ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் மானாவாரி நிலங்களில், விதை தெளிப்பு பணிக்காக டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவுப்பணி நடந்தது. எள், சோளம், துவரை ஆகிய விதைகள் தெளிக்கப்பட்டது.