/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருத்துவ கல்லுாரிக்கு கூடுதல் பஸ்களை இயக்க கலெக்டரிடம் பா.ம.க., மனு

ADDED : செப் 16, 2025 01:28 AM
கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பா.ம.க., மாவட்ட செயலர் பிரேம்நாத் தலைமையில், கரூர் கலெக்டரிடம் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் காந்திகிராமத்தில் உள்ள,அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏழை, நடுத்தர மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து பஸ்சில் வருபவர்கள், காந்திகிராமத்தில் இறங்கி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
காந்திகிராமத்தில் போதிய அளவில் பஸ்கள் இல்லாததால், ஆட்டோவில் செல்ல வேண்டி உள்ளது. இதற்கு, 50 ரூபாய் செலவாகும் என்பதால், மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
காலை நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்ல வசதியாக பஸ்கள் இயக்க வேண்டும். போதிய டாக்டர்கள் இல்லாததால், பயிற்சி டாக்டர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அங்கு, தேவையான டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.