/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கலெக்டரிடம் பா.ம.க.,வினர் மனு
/
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கலெக்டரிடம் பா.ம.க.,வினர் மனு
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கலெக்டரிடம் பா.ம.க.,வினர் மனு
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கலெக்டரிடம் பா.ம.க.,வினர் மனு
ADDED : செப் 02, 2025 12:49 AM
கரூர்:மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ம.க., மாவட்ட செயலர் சுரேஷ் தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம் வாங்கல், நெரூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பகுதியில், இரவு நேரங்களில், 50க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் தினமும் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். நெரூரில் அள்ளப்படும் மணல் மரவாபாளையம், புதுப்பாளையம், நெரூர் வழியாகவும், வாங்கலில் எடுக்கப்படும் மணல், மண்மங்கலம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
இந்த மணல் கொள்ளை தொடர்பாக, கொலை நடந்தும் கூட மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்கள், இரவு நேரங்களில் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். இதனால், காவிரி ஆறு மணல் இல்லாமல் பாலைவனமாக மாறி வருகிறது. குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, உடனடியாக மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால், விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.