ADDED : செப் 20, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், ப.வேலுார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன், 51; கூலித்தொழிலாளி. இவர், ப.வேலுாரில், வீட்டில் தனியாக இருந்த, 15 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில், ப.வேலுார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதை கணேசன் ஒப்புக்கொண்டார். இதனால், போக்சோ சட்டத்தில் கணேசனை, நேற்று கைது செய்தனர்.