/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரவுடி தலை துண்டித்து படுகொலை குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ்
/
ரவுடி தலை துண்டித்து படுகொலை குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ்
ரவுடி தலை துண்டித்து படுகொலை குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ்
ரவுடி தலை துண்டித்து படுகொலை குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ்
ADDED : டிச 19, 2024 01:07 AM
குளித்தலை, டிச. 19-
ரவுடி தலை துண்டித்து, படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை போலீஸ் நெருங்கியுள்ளது.
குளித்தலை அடுத்த, மேட்டு மகாதானபுரத்தில் கட்டளை மேட்டு வாய்க்கால் மேற்கு பகுதி நடுக்கரையோரம், நேற்று முன்தினம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் எஸ்.பி..பெரொஸ்கான் அப்துல்லா, குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் மற்றும் லாலாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், தலை கொடூரமாக சிதைக்கப்பட்டு கிடந்த நபர், அரவக்குறிச்சியை அடுத்த இனுங்கனுார் கிராமத்தை சேர்ந்த காளிதாஸ், 32, என்றும், இவரது பெற்றோர் கர்நாடகாவில் உள்ள அக்கா வீட்டில் வசிப்பதாகவும், இவர் மீது கரூர், அரவக்குறிச்சி, அரியலுார் போலீஸ் ஸ்டேஷன்களில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட நபருடன், மேட்டுமகாதானபுரம் குணசேகரன் மகன் பூபாலன், கம்மநல்லுார் சுரேஷ் மகன் விஷ்ணு இருவரும் பைக்கில் அழைத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. தற்போது இருவர் மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மத்திய சிறையில் இருந்தபோது, மற்ற நபர்களுடன் காளிதாசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், தென் மாவட்டத்தை சேர்ந்த நபருடன் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் மற்றவர்கள் உதவியுடன் காளிதாஸ் தலை துண்டிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் ஐந்து தனிப்படை போலீசார், குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக தெரிவித்தனர்.