/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'சிசிடிவி' கேமரா பொருத்த போலீசார் ஆலோசனை கூட்டம்
/
'சிசிடிவி' கேமரா பொருத்த போலீசார் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 24, 2024 07:09 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் சரகத்-திற்கு உட்பட்ட பஞ்.. தலைவர்களுடன், குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகள் மீது
சட்டபடி நடவடிக்கை எடுக்கும் வகையிலும், 'சிசிடிவி' கேமரா பொருத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
எஸ்.ஐ.. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பஞ்., தலை-வர்கள் கலந்து கொண்டனர். இந்த சரகத்தில், 25க்கும் மேற்பட்ட பஞ்.,களில், 250 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை, பல்வேறு உரிமங்கள் பெறுவதற்கு ஒப்புதல் சான்று, அயல்நாடுகளுக்கு செல்வதற்கான நன்னடத்தை சான்று உள்பட பல்வேறு மக்கள் பணிகளுக்காக, தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் வந்து செல்கின்றனர்.
பல்வேறு பகுதிகளில் திருட்டுகள், கனிம வளங்களை கடத்துதல், மாவட்ட எல்லை பகுதி வழியாக போதை பொருட்களை கடத்தி வருவது, வெளியூர் ரவுடிகள் நடமாடுவது போன்ற பல்வேறு குற்றச்சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து பிடிப்ப-தற்கு, அனைத்து பஞ்.,களிலும் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குளித்-தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தோகைமலை, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் யூனியன் பஞ்., பகுதியில், 250 குக்கிராமங்களை கண்கா-ணிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதில் முதல் கட்டமாக முக்கிய மைய பகுதிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்துவதற்கு அந்தந்த பஞ்.,நிர்வாகத்தினர் ஆலோ-சனை வழங்க வேண்டும் என, கேட்டு கொள்ளப்பட்டது.