/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு மெக்கானிக்கை மிரட்டிய மூவர் மீது போலீசார் வழக்கு
/
அரசு மெக்கானிக்கை மிரட்டிய மூவர் மீது போலீசார் வழக்கு
அரசு மெக்கானிக்கை மிரட்டிய மூவர் மீது போலீசார் வழக்கு
அரசு மெக்கானிக்கை மிரட்டிய மூவர் மீது போலீசார் வழக்கு
ADDED : நவ 19, 2024 01:50 AM
அரசு மெக்கானிக்கை மிரட்டிய
மூவர் மீது போலீசார் வழக்கு
கரூர், நவ. 19-
வேலாயுதம்பாளையம் அருகே, அரசு போக்குவரத்து கழக மெக்கானிக்கிடம், கடப்பாறையை காட்டி மிரட்டியதாக, மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், செவிந்திப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 35; அரவக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக, டிப்போவில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த, 17ல் மாலை வேலாயுதம் பாளையம் அருகே, ஆலமரத்துமேடு பகுதியில், டூவீலரை நிறுத்தி விட்டு நின்று கொண்டிருந்தார்.
அப்போது, மது போதையில் காரில் வந்த ரகுபதி, 51, என்பவர் டூவீலர் மீது மோதினார். இதுகுறித்து, கேள்வி கேட்ட ஆனந்தராஜை, ரகுபதி, அவருடன் காரில் வந்த ஜாகீர் உசேன், 21, அரவிந்த், 27, ஆகியோர் அடித்து உதைத்து, தகாத வார்த்தை பேசி, கடப்பாறையை காட்டி மிரட்டினர்.
இதுகுறித்து ஆனந்தராஜ் கொடுத்த புகார்படி, ரகுபதி உள்ளிட்ட மூன்று பேர் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.