/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
/
கரூர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கரூர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கரூர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
ADDED : மே 15, 2025 01:51 AM
கரூர் :கரூர் மாவட்டத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், பெரம்பலுார் மாவட்டம் குன்னம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், குளித்தலை மகளிர் போலீஸ் ஸ்டே ஷன் இன்ஸ்பெக்டர் கலைவாணி, புதுக் கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டைக்கும், லாலாப்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன், திருச்சி மாவட்டம், சமயபுரத்துக்கும், கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு இன்ஸ்பெக்டர் ரூபி, கரூர் பாலவிடுதிக்கும், குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார், அரியலுார் மாவட்ட சைபர் கிரைம் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், சேலம் மாநகரம்
அஸ்தம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி, கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவுக்கும், திருச்சி இன்ஸ்பெக்டர் புஷ்பாகனி, கரூர் லாலாப்பேட்டைக்கும், விருதுநகர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், குளித்தலை போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல், திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் ஜெயா பாண்டி, குளித்தலை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மேனகா, கரூர் ரூரல் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், சென்னை பெரு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராசு, கரூர் க.பரமத்திக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.