/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலீசாரின் ஆயுதங்கள் பார்வைக்கு வைப்பு
/
போலீசாரின் ஆயுதங்கள் பார்வைக்கு வைப்பு
ADDED : அக் 27, 2024 01:13 AM
போலீசாரின் ஆயுதங்கள் பார்வைக்கு வைப்பு
கரூர், அக். 27-
கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், போலீசாரின் ஆயுதங்களை பொதுமக்கள் பார்வைக்கு, கரூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று வைக்கப்பட்டது.
கடந்த, 1959 ல் அக்., 21 ல் காஷ்மீர் அருகே லடாக் பகுதியில், ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்பு படை போலீசார், 10 பேர் உயிரிழந்தனர். அந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் அக்., 21 ல் பணியின் போது இறந்த, இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், போலீசாரின் சேவை மற்றும் பணிகள் குறித்து, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பல்வேறு விதமான ஆயுதங்களை பார்வைக்கு வைக்க, தமிழக காவல் துறை முடிவு செய்தது. அதன்படி, நேற்று கரூர் பஸ் ஸ்டாண்டில், மாவட்ட காவல் துறை சார்பில், ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதில், காவல் துறையினர் பயன்படுத்தி வரும் பல்வேறு விதமான துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்தன. அதை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.