ADDED : ஜன 19, 2025 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் மாவட்டம், நெரூர் அரங்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் இளவரசன், 31; வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷன் இரண்டாம் நிலை காவலர்.
திருமணமாகவில்லை. வெங்கமேடை சேர்ந்த, 16 வயது பிளஸ் 1 மாணவிக்கு, இளவரசன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மாணவி புகார் செய்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில், போலீசார் நேற்று அதிகாலை இளவரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கைதான இளவரசன், பசுபதிபாளையம் ஸ்டேஷனில் பணியாற்றியபோது, எஸ்.ஐ., ஒருவரை தாக்கிய வழக்கில், சஸ்பெண்ட் ஆகி, மீண்டும் பணிக்கு திரும்பியவர்.

