/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓட்டுச்சாவடி வரையறை ஆலோசனை கூட்டம்
/
ஓட்டுச்சாவடி வரையறை ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 11, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், :கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில், ஓட்டுச்சாவடி வரையறை குறித்த அரசு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலரும், கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி பதிவு அலுவலருமான சுரேஷ் தலைமை வகித்தார்.
அதில், ஓட்டுச்சாவடி மைய பதிவுகள் மற்றும் தேர்தல் சம்பந்தமான குறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபகாரன், தேர்தல் பிரிவு தாசில்தார் சித்ரா, கடவூர் தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஹேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.