/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் அரசு பள்ளியில் மாசு கட்டுப்பாடு தின விழா
/
புகழூர் அரசு பள்ளியில் மாசு கட்டுப்பாடு தின விழா
ADDED : டிச 08, 2025 09:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய மாசு கட்டுப்பாடு தின விழா நடந்தது. அதில், சுற்றுப்புறத்தை மாணவர்கள் பாதுகாக்க வேண்டியதன் அவசியம்; மரக்கன்று நடுவதால் ஏற்படும் பயன்கள்; பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் விஜயன் விளக்கம் அளித்து பேசினார்.
விழாவில், உதவி தலைமையாசிரியர்கள் யுவ-ராஜா, பொன்னுசாமி, வழிகாட்டி ஆசிரியர் குப்பு-சாமி, சுற்றுச்சூழல் ஆசிரியர் ஜெரால்டு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் இன்ஜினியர் திரு-மலை, ஓவிய ஆசிரியர் ஜெய்சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

