/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து முன்னணி அமைப்பினர் கைது
/
ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து முன்னணி அமைப்பினர் கைது
ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து முன்னணி அமைப்பினர் கைது
ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து முன்னணி அமைப்பினர் கைது
ADDED : டிச 08, 2025 09:30 AM
கரூர்: கரூரில் காவல் துறையை கண்டித்து, நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய, ஹிந்து முன்னணி அமைப்பினரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், திருபரங்குன்றத்தில் கந்தன் மலையில் கடந்த, 3ல் கார்த்திகை தீபம் ஏற்ற, தடை விதித்த காவல்துறை, உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவை மதிக்காத, ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து, நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, மாநில ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு வெளி-யிட்டார்.
ஆனால், கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்து, தடை விதித்தனர். இந்நி-லையில், நேற்று மாலை, கரூர் தலைமை தபால் நிலையம் முன், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், அந்த அமைப்பினர் குவிந்தனர். பின், காவல் துறை மற்றும் அறநிலையத்துறையை கண்-டித்து, ஹிந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்-பாட்டம்
நடத்தினர்.
இதையடுத்து, அனுமதி இல்-லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி, பொருளாளர் ரமேஷ் குமார், நிர்வாகிகள் கோகுல கிருஷ்ணன், ஜெயம் கணேஷ் உள்பட, இரண்டு பெண்கள் மற்றும் 58 பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

