/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாளை முதல் பொங்கல் விழா: மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
/
நாளை முதல் பொங்கல் விழா: மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
நாளை முதல் பொங்கல் விழா: மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
நாளை முதல் பொங்கல் விழா: மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
ADDED : ஜன 14, 2024 12:00 PM
கரூர்: பொங்கல் திருவிழாவையொட்டி, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில் நேற்று, பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
தமிழர்களின் முக்கிய விழாவான, பொங்கல் இன்று, போகி பண்டிகையுடன் துவங்கு கிறது. நாளை நடக்கவுள்ள சூரிய பொங்கல், நாளை மறுநாள் நடக்கவுள்ள மாட்டு பொங் கல், 17 ல் நடக்கவுள்ள காணும் பொங்கல் திருவிழாக்களுக்கு பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள், மஞ்சகொத்து, கரும்பு, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில் வாங்கி சென்றனர்.
தேங்காய் ஒன்று, கிலோ, 36 ரூபாய் முதல், 38 ரூபாய் வரையிலும், மஞ்சள் கொத்து ஒரு ஜோடி, 25 ரூபாய் முதல், 30 ரூபாய் வரையிலும், வாழைப் பழம் ரகத்தை பொறுத்து ஒரு சீப், 30 ரூபாய் முதல், 60 ரூபாய் வரையிலும், தக்காளி கிலோ, 28 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெண்டைக்காய் கிலோ, 40 ரூபாய்க்கும், புடலை, 30 ரூபாய்க்கும், கேரட், 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய், 50 ரூபாய்க்கும், கத்தரிக்காய், 28 ரூபாய்க்கும், அவரைக்காய், 70 ரூபாய்க்கும், பாகற்காய், 30 ரூபாய்க்கும், முள்ளங்கி, 30 ரூபாய்க்கும், பீன்ஸ், 60 ரூபாய்க்கும் முட்டைகோஸ், 30 க்கும், செங்கரும்பு, ஒரு ஜோடி, 100 ரூபாய்க்கும், முருங்கைகாய், 120 ரூபாய்க்கும், பச்சை மிளகாய், 60 ரூபாய்க்கும், உருளை கிழங்கு, 45 ரூபாய்க்கும், கருணை கிழங்கு, 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம், 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம், 35 ரூபாய் க்கும், கொத்தவரங்காய், 40 ரூபாய்க்கும், சர்க்கரை வள்ளி கிழங்கு, 40 ரூபாய்க்கும் விற்பனையானது.
கரூர் ஜவஹர் பஜாரில், வீட்டு வாசலில் கோலமிட பயன்படும், கலர் பொடிகளை பெண் கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஒரு பாக்கெட், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. போகி பண்டிகையையொட்டி, வீட்டு வாசலில் வைக்கப்படும், ஆவாரம் பூ, குலப்பூ, தும்பை பூ, வேப்பிலை ஆகியவை உள்ள, ஒரு கட்டு, 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் செயல்படும், வாழை மார்க்கெட்டில் பூவன் தார், 1,000 ரூபாய்க்கும், ரஸ்தாளி மற்றும் கற்பூர வள்ளி தார், 450 ரூபாய்க்கும், மொந்தன், 350 ரூபாய்க்கும், செவ்வாழை தார், 700 ரூபாய்க்கும் பச்சை நாடான், 400 ரூபாய்க்கும் ஏலம் போனது.

