/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொங்கல் விளையாட்டு போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
பொங்கல் விளையாட்டு போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பொங்கல் விளையாட்டு போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பொங்கல் விளையாட்டு போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 16, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், பொங்கல் விழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகள், இரும்பூதிப்பட்டி, கோடங்கிப்பட்டி, வேங்காம்பட்டி, சிந்தலவாடி ஆகிய பகுதிகளில் பொங்கல் விழாவை முன்னிட்டு, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சாக்கு போட்டி, சோடா பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், முறுக்கு கடித்தல் மற்றும் கோல போட்டி, இசைநாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியருக்கு விழா குழுவினர் பரிசு வழங்கினர்.