/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.7.41 கோடியில் மாநகராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு பூஜை
/
ரூ.7.41 கோடியில் மாநகராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு பூஜை
ரூ.7.41 கோடியில் மாநகராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு பூஜை
ரூ.7.41 கோடியில் மாநகராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு பூஜை
ADDED : ஆக 20, 2025 01:57 AM
கரூர், கரூர் மாநகராட்சியில் புதிய பணிகளுக்கு பூமி பூஜை, முடிவுற்ற பணிகளை, கரூர் எம்.எல்.ஏ.,
செந்தில்பாலாஜி, இன்று தொடங்கி வைக்கிறார்.
காலை, 7:00 மணிக்கு வாங்கல் சாலை நெரூர் பிரிவில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி, அம்மன் நகர், அண்ணா சாலை, ராஜிவ் காந்தி நகர், செங்குந்தர் நகர், சுப்பு கார்டன், திட்ட சாலை, காமராஜர் தெரு, பட்டவன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, லீலா கார்டன், திருநகர் மெயின் ரோடு, செங்குந்தபுரம் 4வது கிராஸ், 80அடி சாலை, கோதுார் ரோடு, ராமானுஜர் நகர், யுனிவர்சல் கார்டன்.
எல்.ஜி.பி., நகர், எம்.ஜி.ஆர்., நகர், பிரம்ம தீர்த்தம் ரோடு, உழவர் சந்தை, மக்கள் பாதை, காசிம் தெரு, லாரி மேடு, வாய்க்கால் சந்து, மாரியம்மன் கோவில் தெரு உட்பட, 27 இடங்களில் ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய சின்டெக்ஸ் அமைத்து பைப்லைன் விஸ்தரிப்பு பணியை தொடங்கி வைக்கிறார். மேலும் மழைநீர் வடிகால் அமைத்தல், புதிய சிறு பாலங்கள் கட்டுதல், மழை நீர் வடிகால் அமைத்தல், சிமென்ட் மற்றும் தார் சாலை மேம்பாடு என மொத்தம், 7 கோடியே, 41 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறைவு பெற்ற பணிகளை எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கி வைக்கிறார். பின் புதிய பணிகளுக்கு பூமி பூஜை நடக்கவுள்ளது.