ADDED : ஜூலை 03, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்;கரூர் அருகே சுக்காலியூரில், 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிப்பிடத்தை, பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கழிப்பிடம் பல மாதங்களுக்கு முன் சிதிலமடைந்துள்ளது. கரூர் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளதால், அப்பகுதியினர் அவதிக்குள்ளாகினர். இதனால், பொது மக்கள் திறந்தவெளிப்பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர்.அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுக்காலியூர் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை, சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.