/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி; பரணி வித்யாலயா மாணவி முதலிடம்
/
அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி; பரணி வித்யாலயா மாணவி முதலிடம்
அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி; பரணி வித்யாலயா மாணவி முதலிடம்
அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி; பரணி வித்யாலயா மாணவி முதலிடம்
ADDED : அக் 21, 2024 07:35 AM
கரூர்: அஞ்சல் துறை சார்பில் நடந்த கடிதம் எழுதும் போட்டியில், தேசிய அளவில் பரணி வித்யாலயா பள்ளி மாணவி ஆதிரா முதலிடம் பிடித்தார்.
இந்திய அஞ்சல் துறை சார்பில் நடப்பாண்டு, 'எதிர்கால சந்ததியினருக்கு அவர்கள் எவ்வகையான உலக வாழ்வை பெற்றிருப்பர்' என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடந்தது. அதில், கரூர் பரணி வித்யாலயா பள்ளி, எட்டாம் வகுப்பு மாணவி ஆதிரா, தேசிய அளவிலும், மாநில அளவிலும் முதலிடம் பிடித்தார். மேலும், ஜெர்மன் தலைநகரம் பெர்லினில் நடைபெறும், உலக அளவிலான, இறுதி போட்டியில் இந்தியா சார்பில், பங்குபெற மாணவி ஆதிரா எழுதிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், மாநில அளவில் முதல் பரிசாக, 25,000 ரூபாய்க்கான காசோலை மற்றும் வெற்றி சான்றை, கரூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் தமிழினி, மாணவி ஆதிராவுக்கு வழங்கினார். பள்ளி தாளாளர் மோகனரங்கன், செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி, முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியம், பள்ளி முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா உள்பட பலர் உடனிருந்தனர்.