தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/குழாய் உடைப்பால் சாலையில் பள்ளம்

குழாய் உடைப்பால் சாலையில் பள்ளம்

குழாய் உடைப்பால் சாலையில் பள்ளம்


ADDED : ஜூன் 03, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 04:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:குடிநீர் குழாயில் உடைப்பால், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

கரூர் மாநகராட்சி, ஆண்டாங்கோவில் சாலை அண்ணா நகரில், நேற்று முன்தினம் இரவு, குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் வீணாக சாலையில் சென்று கழிவு நீர் வாய்க்காலில் கலந்தது. நீண்ட நேரமாக குடிநீர் சாலையில் சென்றதால், சாலையில் பள்ளம் விழுந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டூவீலர்களில் செல்கிறவர்கள், தவறி விழுந்து விடக்கூடாது என்பதற்காக, சிவப்பு கொடியுடன் குச்சியை நட்டு வைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர், 'சப்ளை' செய்யும்போது, குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகிறது. இதனால், கரூர் மாநகராட்சி நிர்வாகம், ஆண்டாங்கோவில் சாலை, அண்ணா நகரில் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us