தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு குறித்து மின்வாரியம் அறிவுரை

வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு குறித்து மின்வாரியம் அறிவுரை

வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு குறித்து மின்வாரியம் அறிவுரை


ADDED : அக் 19, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதி களில் மழை பெய்து வருகிறது. ஈர-மான கைகளால் மின் சுவிட்சுகள், சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். வீட்டில் சுவிட்சுகளை, 'ஆன்' செய்யும்போது கவனத்துடன் இயக்கவும். வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்க கூடாது.

நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்த-வுடன் இயக்க வேண்டாம். மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்க கூடாது. வீட்டில் மின்-சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம். மின்

கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின் கேபிள்கள், மின் கம்பங்கள், பில்லர் பாக்ஸ், டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்க வேண்டும்.

வீடுகள், கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். சாலைகளிலும், தெருக்க-ளிலும் மின்கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ, வாகனத்தில் செல்வதோ தவிர்க்க வேண்டும்.

தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின் ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும். புகார்களுக்கு மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை, 94987-94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us