ADDED : அக் 19, 2026 06:52 AM

அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் தேவேந்திரகுல தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர், தமிழ்அழகி
தம்பதியரின் மகள் பவுசாலி. இவர், மேட்டுமருதுாரில் உள்ள அரசு நிதி
உதவி பெறும் தொடக்க பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.
அரசு உதவி
பெறும் பள்ளி சார்பில், குறுவட்டம், வட்டாரம், மாவட்ட அளவில் நடந்த
மாறுவேட போட்டியில் வெற்றி பெற்ற பவுசாலி, மாநில அளவில் நடக்கும்
மாறுவேட போட்டிக்கும் தேர்வானார். அவரை, தாளாளர் கோவிந்தராஜ்,
எம்.எல்.ஏ., சந்திரன், மருதுார் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா, பள்ளி
ஆசிரியர்கள், மேட்டுமருதுார் கல்வி குடும்பம் சார்பில் பாராட்டினர்.
