ADDED : செப் 02, 2026 06:55 AM
அ நிறம் | அளவு
கரூர்:தமிழ்நாடு
மின் ஊழியர் மத்திய அமைப்பு, கரூர் கிளை சார்பில் தலைவர் சுப்பிரமணி
தலைமையில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்
ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ஸ்டார் மீட்டர் திட்டத்தை கைவிட
வேண்டும், மின் வினியோகத்தில் தனியார்மய அறிவிப்பை கைவிட வேண்டும்,
கணக்கீட்டாளர் பணியை அவதுாறாக பேசிய, மின் துறை அமைச்சர் அதை திரும்ப
பெற வேண்டும், கேங்மேன்களை கள உதவியாளராக மாற்றி அறிவிப்பு செய்ய
வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மண்டல செயலாளர் தனபால், கிளை செயலாளர் நெடுமாறன், பொருளாளர் ஈஸ்வரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
