/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
ADDED : ஏப் 26, 2025 01:35 AM
கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை மாத பிரதோஷ விழாவில், நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகமாலீஸ்வரர் கோவிலில், நேற்று சித்திரை மாத பிரதோஷ விழா நடந்தது.
அதில், நந்தி சிலைக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பிறகு, சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி, மூலவர் மேகமாலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், குளித்தலை மீனாட்சிசுந்தரேஸ்வர், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் நதிஈஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோவில், சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.