/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழைக்கு சரிந்த வாழைத்தார்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
/
மழைக்கு சரிந்த வாழைத்தார்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
மழைக்கு சரிந்த வாழைத்தார்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
மழைக்கு சரிந்த வாழைத்தார்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
ADDED : அக் 13, 2025 02:18 AM
கரூர்: தொடர் மழை, காற்றால் சரிந்த வாழைத்தார்கள், கரூரில் விற்ப-னைக்கு அதிகளவில் வரத்தாகின. இதனால், வாழைத்தார் விலை குறைந்துள்ளதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்-ளது. கடந்த, 2 முதல் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை, காற்று காரணமாக, நாகப்பட்-டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில், வாழைத்-தார்கள் சாய்ந்தன. அதை விவசாயிகள் வெட்டி எடுத்து, திருச்சி, கரூர், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே செயல்படும் வாழைத்
தார் மண்டிக்கு நாள்தோறும், ஆயிரக்கணக்கான வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகின்றன. ஏற்கனவே, கரூர் மாவட்டத்தில், பல்-வேறு பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்கு வரு-வ
தால், விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து, வாழைத்தார் வியாபாரிகள் கூறியதாவது: மழை கார-ணமாக, சாய்ந்த வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகிறது. இதனால், கரூரில் இருந்து, வெளியூர்களுக்கு வாழைத்தார்களை அனுப்ப முடியவில்லை. தொடரும் மழை, காய்ச்சல் காரணமாக, வாழைப்பழத்தை பொதுமக்களும் சாப்பிடாமல் தவிர்த்து வரு-கின்றனர். இதனால், வாழைத்தார்களின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.கடந்த மாதம், 500 ரூபாய்க்கு விற்ற பூவன், 300 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 350 ரூபாய்க்கும், கற்பூரவள்ளி, 400 ரூபாயில் இருந்து, 200 ரூபாய்க்கும் விற்கிறது. நேந்திரம் பழம் ஒன்று, 10 ரூபாயில் இருந்து ஏழு ரூபாய்க்கும், செவ்வாழை, 10 ரூபாயில் இருந்து, எட்டு ரூபாய்க்கும் விலை குறைந்து விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.