/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அரசு கலை கல்லுாரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
கரூர் அரசு கலை கல்லுாரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கரூர் அரசு கலை கல்லுாரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கரூர் அரசு கலை கல்லுாரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூலை 27, 2025 01:10 AM
கரூர் :கரூர் தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில், வேலை வாய்ப்பு துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: மாணவர்கள் கல்லுாரி படிப்பை மட்டுமின்றி, அதற்குமேல் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். கரூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்காக, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நுாலகங்களில், அதற்கான புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மைய நுாலகங்களில் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள், துறை வல்லுனர்களின் மூலம் இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தொழிற்பயிற்சி மையம் நடத்தி வருகிறது. இதில் கலந்து கொண்டு, சுய தொழில் தொடங்குவதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். படித்து முடித்து வேலைவாய்ப்பு துறையில் பதிவு பெற்று, 5 ஆண்டுகளுக்கு மேல் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு, அவர்களின் படிப்புக்கு ஏற்றார்போல் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 209 முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில், மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) தனசேகரன், அரசு கலைக் கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.