/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : பிப் 18, 2024 10:35 AM
கரூர்: கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பொது பிரிவு சார்ந்த இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். பின், அவர் கூறியதாவது:
ஒவ்வொரு கிராமத்திலும், சிறிய அளவில் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் உள்ளது. அதில், குறிப்பிட்ட அளவில் விளையாட்டு போட்டி நடத்தி, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட உள்ளது. அந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, விளையாட்டு மைதான அரங்கம் இல்லாத இடமே இல்லை என்ற அளவில் தமிழ்நாடு வந்துவிடும். இவ்வாறு கூறினார்.
கரூர் எம்.பி., ஜோதிமணி, மாநகராட்சி மேயர் கவிதா, டி.ஆர்.ஓ., கண்ணன், முதன்மை கல்வி அலுவலர் சுமதி, அரசு கலைக் கல்லுாரி முதல்வர் அலெக்சாண்டர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் உமாசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.