/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி கல்வித்துறை சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
பள்ளி கல்வித்துறை சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பள்ளி கல்வித்துறை சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பள்ளி கல்வித்துறை சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : நவ 24, 2024 01:28 AM
பள்ளி கல்வித்துறை சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கரூர், நவ. 24-
கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், கலைத்திருவிழாவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா, கலெக்டர் தங்கவேல் தலைமையில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடந்தது.
மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற, 1,009 மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறைக்கு, 44 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். மாணவ, மாணவியர் படிப்பது மட்டுமின்றி, சிறந்த விளையாட்டு வீரர்களாகவும் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில், துணை முதல்வர் உதயநிதி விளையாட்டு துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
கரூர் மாவட்டத்தில், முதல்வர் கோப்பைக்கான போட்டியில், மாவட்ட அளவில், 706 மாணவர்கள் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். அதில், 15 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வீரர்கள் சர்வதேச அளவில் போட்டிகளில், வெற்றி பெற வேண்டும். நானும் அரசு பள்ளி மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
இவ்வாறு பேசினார்.
விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், டி.ஆர்.ஓ., கண்ணன், திட்ட இயக்குனர் ஸ்ரீ லேகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம், மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா, அன்பரசன், சக்திவேல் உள்பட, பலர் பங்கேற்றனர்.